மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு நிகழ்ந்த பேரனர்த்தம்..!!! தாய் தந்தை உட்பட மூவர் பலி.!! மீட்புப் பணியாளர்களுக்கு காத்திருந்த நெகிழ வைக்கும் அதிர்ச்சி.!!

கொலம்பியாவில் விமானம் ஒன்று எதிர்பாராமல் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்தவர்களில் மூவர் பலியாகினர். கொலம்பிய தலைநகர் Bogotaவில் பிரபல மருத்துவர் Fabio Grandas. Grandas, தன் மனைவி Mayerly Diaz Rojas, குழந்தை Martin, மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஆயாவான Nuris Maza ஆகியோருடன் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.அப்போது எதிர்பாராவிதமாக திடீரென அந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. பதறிய மக்கள் அங்குமிங்கும் ஓட, உதவிக்குழுவினர் வந்து விமானத்திலிருந்தவர்களை வெளியே எடுக்க முயன்றுள்ளனர்.அப்போது, Grandas, அவரது மனைவி Rojas, மற்றும் ஆயா Nuris ஆகியோர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

Credit: Newsflash:
மீட்புக்குழுவினர் Rojasஇன் உடலை விமானத்திலிருந்து வெளியே எடுக்கும்போது, அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.Rojas, தன் குழந்தை Martinஐ கட்டியணைத்து, தனது உடலை ஒரு கவசமாக பயன்படுத்தி பாதுகாத்துக்கொண்டிருந்திருக்கிறார்.Rojasஇன் கைகளை விலக்கியபோது, அவரது கைகளுக்குள் இருந்த குழந்தை Martin உயிருடன் இருந்திருக்கிறான்.தான் உயிரிழந்தாலும், Rojas தன் மகனை காப்பாற்றிய விதம் கண்டு, மீட்புக்குழுவினர் நெகிழ்ந்துபோனார்கள். குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.