தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 397 பேர் வெளியேற்றம்!!

தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 397 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 53,011 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 84 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 9,556 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அதேவேளை இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்த நாட்டிற்கு வருகை தந்த 12 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.