முல்லையில் கோர விபத்து..பொலிஸ் உத்தியோகஸ்தர் பரிதாபமாகப் பலி..!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வீதியால் வந்த உழவு இயந்திரமொன்றை நிறுத்தும் படி சைகை காண்பித்துள்ளார்.இதன்போது உழவு இயந்திரத்தை நிறுத்த முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில், பொலிஸ் அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதன்போது, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.