புத்தாண்டு அன்பளிப்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கிய கைதி!!

கைதியொருவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு தலா ஐயாயிரம் ரூபா பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சூசை என்ற கைதியே இவ்வாறு பணம் வழங்கியுள்ளார்.இவ்வாறு பணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த பண அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும், கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கு இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு பண அன்பளிப்புச் செய்வதற்காக குறித்த கைதி சுமார் பத்து லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும், சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவருக்கு குறித்த கைதி வழங்கியுள்ளார்.