இலங்கையில் நேற்று 74 பேருக்கு கொரோனா.!! தொற்றாளர்கள் எண்ணிக்கை 5,244 ஆக உயர்வு.!!

நேற்று (15) நாட்டில் 74 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி தொற்றாளர்கள் எண்ணிக்கை, 5,244 ஆக உயர்ந்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 46 பேர், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 22 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய 3 பேர், கப்பற் பணியாளர்கள் 2 பேர், கடலோடி ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.