தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு..!!

தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ள தொழில் ஆலோசனை சபை கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகை வெகுவக அதிகரித்து, இளம் வயதினரின் வீதம் குறைந்து செல்வதன் மூலம் எதிர்கால தொழில் ஆளணியில் பாரிய வெற்றிடம் ஏற்படலாம்.அதனால் உலகில் ஏனைய நாடுகளில் போன்று ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு, தகமை உள்ள ஊழியர்களின் சேவையை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வரை அதிகரிக்க கவனம் செலுத்துவோம்.அத்துடன் தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு சேவை சம்மேளனம் மற்றும் தொழிற் சங்கங்கள் பூரண இணக்கப்பாடு தெரிவித்தமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.