யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளபட்ட பிசிஆர் சோதனையில் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 193 பேரின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மையத்திலுள்ள 3 பேரே தொற்றிற்குள்ளாகினர்.