யாழ்.தென்மராட்சியில் கோர விபத்து..காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!!

யாழ்.தென்மராட்சிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.


புத்தூர் சந்திக்கு அண்மையாக மாலை 6.30 மணியளவில் விபத்து இடம்பெற்றது.காரைநகர் சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்றபோது, வீதியின் குறுக்கே சிறுவன் வந்தபோது விபத்தில் சிக்கியது.ஏ9 வீதியின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு சிறுவன் கடந்த போது, வேகமாக வந்த பேருந்து சிறுவனை மோதாமல் தப்பிக்க, வீதியின் மறுபக்கம் திருப்பியபோது, புகையிரத தண்டவாளத்தில் மோதி விபத்திற்குள்ளானது.வீதியைக் கடக்க முயன்ற கோகுலன் லக்சிகன் (15) என்ற மீசாலை மேற்கை சேர்ந்த சிறுவன் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.