பொதுமக்களே அவதானம்..! கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட வர்த்தமானி.!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமை அடுத்து அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துள்ளது.


அதனடிப்படையில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்காக முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அடங்கிய சட்ட நடவடிக்கை தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படும்.இந் நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக 10,000 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம், அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது சிறந்தது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.