நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாக அரசாங்க திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அந்த வகையில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
img class=”alignnone size-full wp-image-22280″ src=”https://www.newlanka.lk/wp-content/uploads/2020/10/89468.png” alt=”” width=”800″ height=”400″ />
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், அரச தனியார் நிறுவனங்கள் சிலவும் இவ்வாறு மூடப்படுகின்றன.இன்றும் கொழும்பு HNB Tower தலைமையகத்தில் Level 19 இல் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் காரணமாக ஒரே மாடியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட நபருடன் பழகியவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் குறித்த பகுதியில் கிருமி நீக்கம் செய்வதற்கும், ஏனைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.