இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று..!! இன்று மேலும் 49 பேர் புதிதாக அடையாளம்.!

இன்று மேலும் 49 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,219 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 36 பேம், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 13 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இதன்மூலம் மினுவாங்கொட தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரிக்கிறது.இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,380 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23 நபர்கள் குணமடைந்து வெளியேறினர்.வெலிக்கந்த ஆதார மருத்துவமனையில் இருந்து பத்து பேரும், தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் இருந்து 8 பேரும், இரணவில மருத்துவமனையில் இருந்து மூன்று பேரும், ஹம்பாந்தோட்ட மாவட்ட பொது மருத்துவமனையிலிருந்து ஒரு வெளிநாட்டு நாட்டவர் உட்பட இரண்டு நபர்களும் வெளியேற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.13 வெளிநாட்டினர் உட்பட 1,826 நபர்கள், 14 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 322 நபர்கள் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.