கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி 500 மீற்றர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து.! ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாகப் பலி!!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த தாய் மற்றும் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில், ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில், ஒன்றரை வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் உயிரிழந்த குழந்தையின் தாய் தாயார் மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில் விபத்து தொர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்