யாழ் மக்களுக்கான உலர் உணவு விநியோகத்திற்கு பெருமளவு உப்பு பைகளை வழங்கிய சகோதர இன நிறுவனம்.!!

கொரானா பாதிப்பினால் தவிக்கும் மக்களுக்கு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவர்களின் பணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் சகோதர இன நிறுவனம் ஒன்று தமது தயாரிப்பான உப்பு பைக்கற்றுக்களை இவர்களுக்கு வழங்கி நிவாரணப் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் தமது உலர் உணவுப் பொருட்களுடன் சேர்த்து, மேற்படி நிறுவனத்தினர் வழங்கிய பெருமளவு உப்பு பைக்கற்றுக்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.முதலாம் கட்டமாக இந்த சகோதர இன நிறுவனத்தினர் தமது தயாரிப்புகளை யாழ் மக்களுக்கு வழங்கியுள்ளதுடன், இனி வரும் காலங்களிலும் தமது சேவைகள் யாழ் மக்களுக்கு தொடரும் எனவும்  தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வழங்கியுள்ள தகவல் இது…

COVID-19 தொற்றுக்காரணமாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக எமது சங்கத்தால் தொடர்ச்சியாக உலர் உணவு விநியோகம் மற்றும் சமைத்த உணவு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவருவது தாங்கள் அனைவரும் அறிந்ததே!
எமது இப் பணிகளை அறிந்த சகோதர இனத்தைச் சேர்ந்த ‘Hiru Salt’ நிறுவனத்தினர் தாமாகவே எம்மை தொடர்புகொண்டு உலர் உணவுப்பொதிகளை விநியோகிக்குக்கும் போது, உப்புபைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக்கூறி முதற்கட்டமாக சுமார் 25,000/= பெறுமதியான உப்புப்பைகளை வழங்கியுள்ளனர்! ‘Hiru salt’ நிறுவனத்தின் உரிமையாளர் சகோதர இனத்தவராக உள்ளபோதும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இடர் நிலமையை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான உப்புக்களை இலவசமாக வழங்குங்கள் எனக்கூறி, தொடர்ந்தும் எமது உலர்உணவுப்பொதிகளுக்கான உப்புபைகளை வழங்குவதாக கூறியுள்ளனர்!காலத்திற்கேற்ப, மனித நேயத்துடன் பயணிக்கும் ‘Hiru salt’ நிறுவனத்திற்கும் உரிமையாளருக்கும், எம்மை அறிந்து எமக்கு இந்த உப்பு பைகளை வழங்கிய,திரு.ஜங்கரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!

-இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்