ரத்தப் பிரிவில் A மற்றும் B போன்ற பிரிவில் உள்ள நபர்களை தான் அதிகம் கொரோனா தாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சொல்லப் போனால், ஓ ரத்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல நூறு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றின் முடிவில் இருந்து தான் இவை வெளியாகியுள்ளது.