பொதுமக்களுக்கு ஒர் முன் எச்சரிக்கை.!! கொழும்பில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!!

கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் பெண் மற்றும் ஆண் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவும் வகையில் மோசமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தாங்கள் நிரபராதிகள் என இந்த இருவரும் நீதிமன்றத்தில் கூறியமையினால் மீண்டும் வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிற்பகல் உணவு பெறுவதற்காக அவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.