சட்டத்தை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில்!!

மாளிகாவத்தையில் தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், வகுப்புகள் மற்றும் பாடசாலைகள், விழாக்கள், கூட்டங்கள் என்பன நடத்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், குறித்த தடை உத்தரவை மீறி வகுப்புகளை நடத்திய ஆசியர்கள் உட்பட மாணவர்களையே தனிமைப்படுத்தலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.