கொழும்பில் இதுவரை 6 கொரோனா நோயாளிகள்!! நாளாந்தம் 250-300 பி.சி.ஆர் சோதனைகள்!

மினுவாங்கொடவில் ஆரம்பித்த கொரோனா தொற்று அலையை தொடர்ந்து, கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் இதுவரை 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாகரசபை எல்லைக்குள் கொரோனா அபாயமுள்ள பகுதிகள் மற்றும் குழுக்களிற்குள் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளாந்தம் 250-300 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.யூனியன் பிளேஸில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அந்த குடியிருப்பிலுள்ள ஏனைய குடியிருப்பாளர்கள் இன்று பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.