கொரோனா நோயாளிகள் பயணித்த பேருந்துகள்!! யாழ்ப்பாணம் சென்ற பேருந்தும் கண்டுபிடிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் பயணித்த 6 பேருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.நாங்கள் அடையாளம் கண்டுள்ள பேருந்துகள் பல உள்ளன. அதில் ND 4890 என்ற இலக்கம் கொண்ட கொழும்பு – மெதகம சென்ற பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார். அத்துடன் ND 2350 என்ற இலக்கம் கொண்ட மாக்கும்புர – காலி சென்ற பேருந்து ஒன்றிலும் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.அதேபோல் ND 549 – என்ற இலக்கம் கொண்ட அம்பலங்கொட பேருந்தில் கடவத்தை சென்ற கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார். அத்துடன் கொழும்பு – யாழ்ப்பாணம் சென்ற 6503 என்ற இலக்கம் கொண்ட பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் பயணித்துள்ளார்.எல்பிட்டிய – கொழும்பு சென்ற ND 9788 என்ற இலக்கம் கொண்ட பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.காலி – கடவத்தை சென்ற NF 7515 என்ற பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளும் கண்கானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அதிக சொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.