உயர்தரப் பரீட்சையின் பின்னர் முடங்கப் போகும் தனியார் பேருந்து சேவைகள்..!! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..!!

க.பொ. த உயர்தர தர பரீட்சைகள் நிறைவடைந்ததும் தனியார் துறை போக்குவரத்து சேவை வெகுவாக குறைவடையவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்னவை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் போக்குவரத்துகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பரவல் காரணமாக வாகனங்களுக்கான லீசிங் தவணை பணத்தை செலுத்தும் அளவுக்கு வருமானம் கிடைக்காத நிலையில், பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல் இருக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் சேவையில் இருந்து விலகுவதாக அவர் குறிபிட்டுள்ளார்.தற்போது 50 வீதமான தனியார் பேருந்துகளே பயணத்தில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை, பரீட்சைகளின் பின்னர் தாம் பயணத்தில் இருந்து விலகுவதாக இன்னமும் தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை தனியார் பேருந்துகளின் தலைவர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.எனினும், பிரதான பேருந்து சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.