2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை..!!

2020 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணம் செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

“Conde Nast Traveler” என்ற சுற்றுலாத் துறை தொடர்பில் தகவல்களை வௌியிடும் இதழ் இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது.முதலிடத்தில் இத்தாலியும், இரண்டாவது இடத்தில் இலங்கையும், தொடர்ந்து போர்த்துக்கல், ஜப்பான், கிரீஸ், தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.இந்நாட்டு கலாசாரம், தேயிலை தோட்டம் மற்றும் காதலர் கடற்கரை ஆகியன குறித்த இதழில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இம்மாதம் வௌியான குறித்த பத்திரிகையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “Reader’s Choice Awards” இனை சிறிய இடைவெளியிலான எண்ணிக்கையில் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.