ஐ.பி.எல். ரி-20:சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) டுபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சர்ம் கர்ரன் (Sam Curran) மற்றும் டு பிளசிஸ் Faf du Plessis ஆகியோர் களமிறங்கினர்.டு பிளசிஸ் Faf du Plessis டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.அவரைத் தொடர்ந்து சேன் வொட்சன் Shane Watson களமிறங்கினார். அதிரடியாக ஆடிய சர்ம் கர்ரன் (Sam Curran) 21 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்களாக 31 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த அம்பத்தி ராயுடு, சேன் வொட்சன் (Shane Watson) உடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி 14வது ஓவரில் சென்னை அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வொட்சன் 42 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணியின் தலைவர் எம்.எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் விளையாடினர்.எனினும், டோனி 13 பந்துகளில் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.ஐதராபாத் அணியின் சார்பாக சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து, 168 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் Jonny Bairstow ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

13 பந்துகளை சந்தித்த வோர்னர் 9 ஓட்டங்களைப் பெற்று Sam Curran பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே 4 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் தொடக்க வீரர் பிரிஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.24 பந்துகளை சந்தித்த பிரிஸ்டோவ் 23 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிரியம் கர்ருடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரியம் கர் 16 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினார்.

ஒற்றை வீரராக போராடிய வில்லியம்சன் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 57 ஓட்டங்களைக் குவித்து கரன் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.