ரிஷாட் பதியூதீனின் கணக்காளர் அதிரடியாகக் கைது..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கணக்காளர் அழகரட்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதில் இருந்து பாதுகாக்க முற்பட்ட அவரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் இரண்டு கார்களும் துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.