நாட்டில் மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு..!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் 17 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

ஏனைய 12 பேரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையில் இவர்களையும் சேர்த்து இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5038ஆக உயர்ந்துள்ளது.வைத்தியசாலைகளில் 1668பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர், இதற்கிடையில் இன்று 29பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 3357ஆக உயர்ந்துள்ளது.