பொது விடுதிகளில் தங்கியிருந்து பணிக்கு செல்பவர்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு..!

பொது விடுதிகளில் தங்கியிருந்து பணிகளுக்கு செல்பவர்கள், விடுதியிலுள்ள ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை பணியாற்றும் நிறுவனத்தின் பிரதானிகளிடம் தெரியப்படுத்துமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் நூற்றுக்கு 45 வீதமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என இராணுவத தளபதி கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொத்தணியில் புதிதாக 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.