அதிக விலைக்கு விற்பனை செய்ய சாராயத்தைப் பதுக்கி வைத்த யாழ் வாசிக்கு நேர்ந்த கதி..!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்களை இளவாலைப் பொலிஸார் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பண்டத்தரிப்பு நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் சாராய போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.குறித்த வீட்டினை போலீசார் சோதனையிட்ட போது அங்கு 180 மில்லி லீட்டர் சாராயப்போத்தல்கள் 50 மீட்கப்பட்டது.மேலும், சாராய போத்தல்களை பதுக்கி வைத்த வீட்டின் உரிமையாளரான 48 வயதுடைய சந்தேக நபரும் இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவலினால் மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டப்படலாம், அப்போது அதிக விலையில் அவற்றை விற்கலாமென்ற நோக்கத்துடன் அவர் மதுபானத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.