இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் ஒன்பது பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி, இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 285 பேருக்கு இன்று கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.குறித்த பரிசோதனைகள், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ள த.சத்தியமூர்த்தி, ஏனைய 276 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மன்னார் பட்டித்தோடடம் மற்றும் பெரிய கடை பகுதிகளைச் சேர்ந்த 81 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.