இலங்கையில் கொரோனாவை காரணம் காட்டி குறுஞ்செய்தி மூலம் வரும் ஆபத்து..!

உங்களது தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு, இலவச முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக சில குறுஞ்செய்திகள் வருகின்றன.அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு அந்த லிங்கை கிளிக் செய்யும்போது, உங்களது அலைபேசி முற்று முழுதாக ஹெக் செய்யப்படும் என்றும் எனவே, இது குறித்து அலைபேசி பாவனையாளர்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.