இலங்கை மக்களுக்கு ஒர் நற்செய்தி..இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் விலைக் குறைப்பு..! இறக்குமதி வரி நீக்கம்!!

சில அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய ரின்மீன், சீனி, பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கப்படவுள்ளது.

இவ்வாறு இறக்குமதி வரி நீக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் மேற்படி பொருட்களின் விலையும் குறைக்கப்படவுள்ளது.இதன்படி பெரிய ரின்மீன் ஒன்று 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோவை 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.