இல்லத்தரசிகளுக்கு ஓர் சமையல் டிப்ஸ்..!! ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அரிசிப் பிட்டு செய்வது எப்படி?

சிவப்பு அரிசியில் அதிக அளவு நார்சத்து நிறைந்து இருப்பதால், கொழுப்புச் சத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சிவப்பு அரிசியினை சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. இப்போது சிவப்பு அரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அரிசி – 2 கப்,
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு,
தேங்காய் – 1
வாழைப்பழம் – 1,
உப்பு – தேவையான அளவு.

சிவப்பு அரிசியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, காயவைத்து புட்டு மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அடுத்து மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து புட்டுக்குழாயில் முதலில் தேங்காய்த் துருவல், சிறிது மாவு எனக் கலந்து வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து நாட்டுச் சர்க்கரை மற்றும் பழத்துடன் சாப்பிட்டால் சிவப்பு அரிசி புட்டு ரெடி.