கணவன், மனைவியை கட்டிவைத்து 16 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை..!! யாழ் தென்மராட்சியில் பயங்கரம்..!!

யாழ்.தென்மராட்சி – கச்சாய் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

முகத்தை மறைத்துக் கொண்டு கம்பிகள், கத்திகளுடன் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் வீட்டில் வசித்த கணவன், மனைவி இருவரையும் கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த தாலிக்கொடி உட்பட பல நகைகளை கொளளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 10 பவுண் தாலிக்கொடியும், 4 பவுண் சங்கிலியும், 1 பவுண் மோதிரமும், 3/4 பவுண் தோடும் மற்றும் 25000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.