முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிடியாணையின்றி கைது செய்யலாமென நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவரை கைது செய்யும்படி சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்களிக்க பேருந்துகளில் அழைத்து சென்ற விவகாரத்தில் பொதுச்சொத்துக்களை வீணாக்கியது, தேர்தல் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அரச பேருந்துகளைப் பயன்படுத்தி புத்தளத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதாக ரிஷாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.அதற்கமைய அவர் மீது நீதிமன்ற பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.