கொழும்பின் பல பிரதேசங்களிலும் கொரோனா அபாயம்..கல்கிசை கொரோனா நோயாளரால் வந்துள்ள ஆபத்து..!!

கொழும்பில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் கொழும்பின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நபர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே குறித்த கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்ததாகவும், செப்டெம்பர் 27ஆம் திகதி கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சியை பார்வையிடச் சென்றதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள குறித்த நபரின் மனைவி ஒரு வைத்தியர் எனவும் தற்போது அவர் மகப்பேறு விடுவிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.