யாழ் நகர் அருகே மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு.!

யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லுாரிக்கு அருகில் உள்ள குளத்தின் அருகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனையின்போதே வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 4 கிலோ ரீ.என்.டி வெடிமருந்து மற்றும் 10 டெட்டனேட்டர்கள் இருந்தாக கூறப்படுகின்றது.