அரச, தனியார் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவிப்பு..!!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும் போது;

அதற்கமைய குறித்த தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் திரட்டுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று காலை தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தத் தகவலை வெளியிட்டார்.நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அவசர தேவைகளை கருத்திற் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.