200ற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய உதவிய அம்புலன்ஸ் சாரதி..கொரோனாவுக்கே பலியான சோகம்..!!

கொரோனா சமயத்தில் 200ற்க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய உதவிய ஆரிப் கான் எனும் ஆன்புலன்ஸ் டிரைவர் கொரோனாவுக்கு பலிகாயிருப்பது அலைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் இயங்கி வரும் பகத் சிங் சேவா தல் அமைப்பில் ஆரிப் கான் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அவசர தேவையில் உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை இந்த அமைப்பு வழங்கியுள்ளது.கொரோனா சமயத்தில் உடல்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் ஆரிப் கான் முன்னணியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய உதவியுள்ளார்.

இதில் பலருக்கும் தன் சொந்த செலவிலிருந்து உதவியுள்ளார் என அவருடைய ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.கொரோனா பாதித்தவர்களை கையாள்வதால் வீட்டிற்கு செல்லாமல் வெளியிலே தங்கி வந்துள்ளார் ஆரிப் கான். ஊரடங்கு அமலில் இருந்த ஆறு மாத காலத்தில் ஓரிருமுறை மட்டுமே அவருடைய குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளார் ஆரிப் கான்.அவருடைய மூத்த மகன் ஆதில், “கடைசியாக அப்பா வீட்டுக்கு வந்தபோதும் புதிய உடைகளை எடுத்துச் செல்லவே வந்தார். அவருடன் நாங்கள் நேரம் செலவழித்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய உடல்நலம் பற்றி நாங்கள் கவலை கொண்டிருந்தாலும் சேவை செய்வதில் மட்டுமே அவர் குறியாக இருந்தார்” என்றார்.அவருடைய இளையமகன் ஆசிப், “அவருக்கு ஒரு குட் பை சொல்லும் வாய்ப்புகூட கிடைக்கவில்லை. அவர் இல்லாமல் எப்படி இருக்கப்போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.மாதம் 16,000 ரூபாய் சம்பாதித்துவந்த ஆரிப் கான் வீட்டில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர். இதனால், அவருடைய குடும்பம் பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளது.கடந்த அக்டோபர் 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆரிப் கான் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.