இலங்கையில் இன்றிரவு மேலும் 51 கொரோனா நோயாளர்கள் அடையாளம்..!!

கம்பஹா – மினுவங்கொடைப் பகுதியிலிருந்து மேலும் 51 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் இன்றிரவு 7 மணி நிலைவரப்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.கம்பஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள். ஏனைய 36 பேரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4842 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 1512 பேர் வைத்தியசாலைகளில் உள்ளதுடன் 306 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.