இலங்கையில் மிக வேகமாகப் பரவும் வீரியம் மிக்க வைரஸ்.!! மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.!!

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று ஒருவரிலிருந்து மற்றவருக்கு மிக வேகமாக பரவுவதுடன், மிக வீரியத்துடன் இருப்பதாக வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் நிபுணர்களால் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயருவன் பண்டார இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கையில் குறிப்பிட்டதாவது, வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் பணிப்பாளர் மருத்துவர், பாலிதா கருணபிரேம,நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் திறனில் 70 சதவீதம் இப்போது நோயாளிகள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.இதேவேளை, கோவிட் 19 வைரஸை உலகில் இருந்து ஒழிக்கும் வரை அதனுடன் மக்கள் வாழப் பழகவேண்டும் என்றுசுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.இம்முறை ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் உடலுக்குள் தொற்றாத வகையில் மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.தொழிற்சாலையிலும் ஒரு சில வாரங்களாக ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் வேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும் எங்கிருந்து ஆரம்பமானது என ஆராயப்பட்டு வருகிறது.மேலும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் நூற்றுக்கு 70 வீதம் நோயாளிகளால் நிறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் ஊரடங்கு உத்தரவை நீக்க முடியாது என்றும் நாட்டை சமாளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார், இன்று ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையை கோரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என்று தான் நம்புவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர கூறினார்.

2