மது போதையில் தாயை துன்புறுத்திய தந்தையை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த 19 வயது மகன்

கல்நெவ பகுதியில் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடம்பெறும் மோதல்கள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக பல்வேறு பழிவாங்கல் சம்வங்கள் இடம்பெற்று வருவதுடன் நேற்று செவ்வாய்கிழமையும் இடம்பெற்ற சம்பவத்திலேயே இவ்வாறு மகனால் தந்தை கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.கல்நெவ – கரவலகஸ்வௌ பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கல்நெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவலகஸ்வவெ வ- சேனபுர பகுதியில்அமைந்துள்ள வீடொன்றில் மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையொருவரே உயிரிழந்துள்ளதுடன் அவரது 19 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த தந்தை தினந்தோரும் மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்து அவரது மனைவியுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை தாக்கி துன்புறுத்தும் பழக்கத்தை கொண்டவர் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.அன்றைய தினமும் நன்கு போதையில் வந்துள்ள அவர், வழமையைப் போலவே மனைவியுடன் மோதலை ஏற்படுத்திக் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.இதன்போது, அவரது மகன் போதையில் இருந்த தந்தையின் கழுத்தை கூரிய ஆதத்தால் வெட்டியுள்ளார். இதனை அடுத்தே தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.