உலக பிரியாணி தினத்தில் 1.5 கிமீ தூரம் பிரியாணி வாங்க வரிசையில் காத்துக் கிடந்த பொதுமக்கள்!!

அசைவ உணவுப் பொருட்களில் ஒன்றான பிரியாணிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். பிரியாணிக்காக மட்டுமே பெரிய அளவில் இயங்கும் 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் உள்ளன.

அந்தவகையில் பெங்களூரு ஹோஸ்கேட் நகரில் ஆனந்த் தம் பிரியாணிக் கடை உள்ளது, அந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.ஒவ்வொரு நாட்களிலும் 3000 த்திற்கும் மேற்பட்ட பிரியாணியானது அந்தக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதிலும், வார இறுதி நாட்களில் விற்பனையோ மிகவும் அதிக அளவிலானதாக உள்ளது.
பல ஆயிரக் கணக்கிலான பிரியாணியானது ஒரு சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்துவிடுவது வழக்கமாகும். அந்த விற்பனையானது இன்று வேறு லெவலாக உள்ளது.வார விடுமுறை மற்றும் உலக பிரியாணி தினம் என்பதால் மக்கள் ஏறக்குறைய சுமார் 1.5 கிமீ தொலைவு வரை காத்துக் கிடக்கின்றனர்.இதுகுறித்து அவர் கூறும்போது, “22 ஆண்டுகளாக நடத்தி வரும் கடையில் ஒவ்வொரு நாளும் 3000 க்கும் மேற்பட்ட பிரியாணியானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வார இறுதி நாட்களில், பிரியாணி விற்பனை அமோகமாக இருக்கும்.மேலும் இதில் இயற்கையான பொருட்கள் கலந்து பிரியாணி செய்வதால் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பப்படுகிறது” என்றார்.