வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று!! சுகாதாரப் பிரிவு வெளியிட்ட தகவல்..!

வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த நாட்களில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டதை அடுத்து 150 பேர் உடனடியாகவே தனிமைப்படுத்தப்பட்டனர்.இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலையில் 42 பேரிடமும் மாலையில் 51 பேரிடமும் என மொத்தம் 93 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த 93 மாதிரிகளில் முதன் முதலாக இனம்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த முதலாவது தொடர்பாளர்களான 42 பேரில் 27 பேரினது முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளிவந்தது. அதில் ஐவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதில் எஞ்சிய 15 பேரின் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தபோது அதில் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்று இரண்டாம்நிலை தொடர்பாளர்கள் என இனம்காணப்பட்ட எஞ்சிய 51 பேரின் முடிவுகள் இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.