ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா..!!

கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அந்த தொடர்மாடியின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், மறு அறிவித்தல் வரும்வரை வெளியிலிருந்து எவரும் தங்களது தொடர்மாடிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அறிவித்துள்ளனர்.மேலும், குறித்த ஆடம்பர தொடர்மாடியில் பல முக்கிய பிரமுகர்கள் வசித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.