சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் மேலும் இருவருக்கு கொரோனா..!

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் நேற்றய தினம் 8 பேர் தொற்றுக்குள்ளான நிலையில், இன்றைய தினம் இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருக்கின்றது. இன்றைய தினம் 23 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இன்று 23 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர், பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்திலிருந்த 3 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் 7 பேர், நல்லூர் சுகாதாரப் அதிகாரி பிரிவில் 2 பேர்,  முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் 7 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.இதில், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் தொற்றிற்குள்ளாகியிருப்பது உறுதியானது.