மன்னாரில் மேலும் பல கொரோனா தொற்றாளர்கள்!!

மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மன்னாரில் இதுவரை ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 243 பேருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு ஐவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கே கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று மாலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.