வைத்தியர்கள், பௌத்த குருமார்களுக்கும் கொரோனா தொற்று.!! இன்று இதுவரை 61 பேர் புதிதாக அடையாளம்.!!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 39 பேர் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்போது தங்கியுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 22 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இப்போது 1100 ஐ கடந்துள்ளது.இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 வைத்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றில் 1100 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 3 வைத்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த இருவர், கேகாலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 3 வைத்தியர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.இதேவேளை, கம்பஹவின் எலவபிட்டிய பகுதியை சேர்ந்த 4 பௌத்த பிக்குகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.