கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்து இலங்கையை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சீனா.!! இலங்கை நாணயப் பெறுமதியில் எவ்வளவு தெரியுமா..?

இலங்கைக்கு 600 மில்லியன் யுவானை சீனா அரசாங்கம் நிதி உதவியாக வழங்கியுள்ளது.இது இலங்கை நாணயப் பெறுமதியின்படி 16.5 பில்லியன் ரூபாவாகும்.இந்தத் தகவலை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.சீனாவின் நிதியுதவிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.