அனலைதீவு மற்றும் காரைநகர் பிரதேசங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு..!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தற்காலிகமாக முடக்கப்பட்ட அனலைதீவு மற்றும் காரைநகரிலுள்ள சில பகுதிகள் இன்று விடுவிக்கப்படுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சந்தேகத்தின் கடந்த இரு நாட்களுக்கு முன் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப்பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானதால், அனலைதீவு மற்றும் காரைநகரின் ஒரு பகுதியில் விதிக்கப்பட்ட லொக் டவுன் விலக்கப்பட்டது.அதேவேளை,அங்கு தனிமைப்படுத்தப்பட்ட 8 குடும்பங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதன் காரணமாக இன்று அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.