பொதுமக்கள் சேவை இடைநிறுத்தப்படுவது குறித்து போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!!

எதிர்வரும் வாரம் அதாவது அக்டோபர் 12 – 16ஆம் திகதி வரையில் போக்குவரத்துத் திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அளககோன் விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும்,தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 பரவல் நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்களில் பொது மக்கள் சேவைகள் இடம்பெறாது.இதேவேளை, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வாகன அனுமதிப் பத்திர புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் வாகன அனுமதிப்பத்திரங்களை மீள் புதுப்பிக்கும்போது, அதற்கென அபராதத் தொகை விதிக்கப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா பரவல் நிலையைக் கருதிற்கொண்டு குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள பொது மக்கள் சேவைகள் எதிர்வரும் வாரம் இடம்பெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.