ஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா.!! தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்..!

மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் பிரன்டிக்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி காரணமாக நாடு முழுவதும் கொரோனா ரைவஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.