கனடாவில் இளம் தமிழ் பெண் திடீர் மாயம்! பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்..!!

கனடாவில் ரோஜா ஸ்ரீதரன் என்ற 26 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் குறித்த பெண்ணை கண்டுபிடிக்க டொரன்ரோ பொலிஸ் சேவை பொதுமக்களின் உதவியைக் கோருகிறது.

இது தொடர்பில் டொரன்ரோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.அதன்படி ரோஜா ஸ்ரீதரன் என்ற 26 வயது இளம்பெண் Warden Ave and Eglinton Ave E பகுதியில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9:45 மணிக்கு கடைசியாக காணப்பட்டுள்ளார்.
5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவராகவும் நீளமுள்ள கூந்தலுடனும் இருப்பார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர் காணாமல் போன போது, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.ரோஜா ஸ்ரீதரனை பார்த்தாலோ அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ;
416-808-4300,416-222-TIPS (8477), www.222tips.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.