ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 5 மாணவர்கள்!!

கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கப்படும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் நாளை (11) 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

சிகிச்சை பெறும் 5 மாணவர்களிற்குமாக ஐ.டி.எச் இல் சிறப்பு பரீட்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 மாணவர்களும், கொரோனா சந்தேகத்தில் 3 மாணவர்களும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.